ஹெல்மெட்டை இழந்த திருடன் (உண்மைச் சம்பவம்)
சில
வருடங்களுக்கு முன்பு என் வீட்டில் நடந்த உண்மைச் சம்பவம். நாங்கள் கிராமத்தில்
வசிக்கிறோம். எங்கள் தெருவில் உள்ள அனைத்து வீடுகளும் நெருக்கமாகத்தான்
அமைந்திருக்கும். என் வீட்டின் இடது புறத்தில் பயன்படுத்தாத ஓட்டு வீடு உள்ளது. பின்புறத்தில் இரண்டு வீடுகளுக்கும்
இடையில் இருசக்கர வாகனம் செல்லும் அளவிற்கு சந்து ஆரம்பிக்கும். ஆனால் முன்னால்
செல்லச்செல்ல சந்து ஒரு ஆள்கூட நுலையமுடியாத அளவிற்கு குறுகி இருக்கும்.
சம்பவத்தன்று யாரோ ஆசாமி திருட வந்தானா, திருடிவிட்டு வந்தானா என்று தெரியவில்லை. சந்தின்
சூச்சுமம் தெரியாமல் பின்புற சந்தின்வழியாக வேகமாக நுழைந்திருக்கிறான்.. அவன் வந்த
வேகத்தில் ஹெல்மெட் இரண்டு வீட்டுச்சுவர்களுக்கிடையில் வசமாக மாட்டிக் கொண்டதுபோலும்.
ஹெல்மெட்டுடன் தலையை எடுக்கமுடியாமல் தவித்த ஆசாமி கடைசியில் ஹெல்மெட்டிலிருந்து
தன் தலையை விடிவித்துக் கொண்டு வந்த வளியே தப்பி ஓடியிருக்க வேண்டும். காலையில்
முதல்தளத்திற்கு மேல் உள்ள வீட்டின் மொட்டை மாடியிலிருந்து என் தம்பி இரண்டு
வீட்டின் சுவர்களுக்கிடையில் ஏதோ மாட்டியிருப்பதை கவனித்தான். நாங்கள் அனைவரும்
அங்கு சென்று பார்தோம். அடர் சிவப்பு நிறத்திலான ஹெல்மெட் வசமாக மாட்டியிருந்தது.
நாங்களே அதை போராடித்தான் வெளியில் எடுத்தோம். அது தற்போது எங்கள்வசம் தான்
உள்ளது.