Powered by Blogger.

ATM ஒரு கோவில்

காசெனும் கடவுளைக் காண
கால் கடுக்க வரிசையில் நின்றிருந்தேன்;
ATM வாசலில்,
என்முறை வந்தது காடைச் சொருகி
காசை எடுத்தேன்;
சீட்டொன்று வந்தது,
இனி இங்கு வராதே,
உன் கணக்கில் காசேதும் மீதமில்லையென்று..
-தமிழ் கோ
(30.11.14)

பசியும் பணமும்

பசியிருந்தும் புசிக்க உணவில்லை;
பணமில்லாததால்,
புசிக்க உணவிருந்தும் பசியில்லை;
பணம் நிறைய இருந்ததால்..
                          - (29.11.14)

விழிகளை தானம் செய்துவிட்டுப்போ..


அன்பே..
உன் விழியென்ன முடிவிலியாய் இந்த உலகிற்கு வெளிச்சம் தரும் தீபமோ?

மண்ணில் மனிதன் மறைவு என்பது இயற்கைதான்,
உன் மறைவிற்கு பிறகு ஏற்ப்படும் இருளில் தான் இந்த உலகின் அழிவு தொடங்குமோ?!!

உன் விழிகளை தானம் செய்துவிட்டுப்போ..
பாவம் இந்த உலகம் உன் பெயரைச் சொல்லி பிளைத்துக் கொள்ளட்டும்..!
-தமிழ் கோ
(16.11.14)

ஆசை


சுவாசிக்காத நேரமும் கவிதை யோசிக்க வேண்டும்,
அதுவே என் சுவாசமாய் இருக்கும்..
ஆசை
-தமிழ் கோ
(15.11.14)

பெண்ணால் என்ன செய்ய முடியும்?


பெண்னை வெறும் உடலென பார்க்குது கலியுகம்,
சரிநிகரென எண்ணுது என் மனம்,
இவள் நெருப்பில்லாதொரு தீபமாம்,
இவள்மேல் உலகிற்கேன் கோபமாம்?
இவள் அடிமையாய் இருக்கத்தான் விதியுள்ளதா?
இவளை அடிமை செய்த ஆண்களுக்குத்தான் மதியுள்ளதா?
விதியில் எனக்கு நம்பிக்கை இல்லை,
விதி இயற்ற முடியுமெனில் அது இவளன்றி வேறு யாருமில்லை,
என்ன செய்வாளென எண்ணினோம்,
எதையும் செய்யவல்லது பெண்ணினம்.
-தமிழ் கோ
(12.11.14)

தீட்டும் புனிதமும்



இன்னும் சாதிகள் மறையவில்லையே பாரதி
மண்ணில் உடன்பிறந்த மனிதனை தீட்டு என்பதும்,
மாசுபட்ட நீரை புனிதமென்பதும் மாற இன்னும் சில நூற்றாண்டாகுமே?
-தமிழ் கோ
(09.11.14)

கருப்புப் பணம்


விசம் விற்ற பணம் கசப்பதுமில்லை..
பூ விற்ற பணம் மனப்பதுமில்லை.
ஆனால் இவை இரண்டையும் முறைகேடாக விற்ற பணம் மட்டும் கருப்பாகி விடுகிறது!
-தமிழ் கோ (28.10.14)

பெற்றோருக்காக..

பெற்றோரின் அன்பை கண்ணீரோடு ஒப்பிடுவேன்..
நம்முல் இருக்கும்போது உணரமுடியாது,
கண்களில் வழியும்போது உணர மட்டுமே முடியும்,
அது மண்ணில் விழும்போதுதான் பார்க்க முடியும்..
பெற்றோரின் அன்பை மண்ணில் வீழ்த்தி பார்த்துவிடாதீர்கள்,
அது காய்ந்து உயிரை விட்டுவிடும்.
-தமிழ் கோ