Powered by Blogger.

ராகுலும் புரட்சியும் (சிறுகதை)

ராகுல், வேலையில்லா பட்டதாரி இளைஞன். அரசின் மீதும் மூத்த சமூகத்தின் மீதும் வெறுப்பு கொண்டிருந்தான். முதியவர்கள் நாட்டிற்கு ஏதும் செய்யாதவர்கள், அவர்கள் நாட்டிற்கே தேவையற்றவர்கள் என்று முடிவுகட்டியிருந்தான். பெற்றோர் வாங்கித்தந்த பைக்கில் ஊர் சுற்றுவது, டீக்கடையில் நண்பர்களுடன் வியாக்கியானம் பேசுவது, தெருவில் செல்லும் முதியவர்களை கிண்டலடிப்பதுமாக காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.

அவன் வீடு கடைத்தெருவிலிருந்து சற்று தள்ளியே இருந்தது. அவன் காலை உணவு முடிக்கிற நேரத்தில் அவன் நண்பர்களிடமிருந்து செல்போனுக்கு அழைப்பு வந்தது. "இதோவர்றேண்ட" என்று சுருக்கமாக பதிலளித்துவிட்டு வண்டியில் சாவியை இட்டுத் திருகி ஒரு மிதிமிதித்து வண்டியைக் கிலப்பினான். 2, 3 கியர்களிலேயே வண்டி 60 கி.மீ வேகத்தைத் தொட்டிருந்தது.

அவனுக்கு முன்பாக 100மீ தொலைவில் வெள்ளையுமில்லாமல் மஞ்சளுமில்லாமல் கசங்கிய வேட்டி சட்டையுடன் ஒரு முதியவர் பதறாமல் நடந்து சென்றுகொண்டிருந்தார். பின்புறம் திரும்பிப்பார்த்த அந்த முதியவர் இவன் அருகில் வந்ததும் கையை நீட்டி வண்டியை மறித்தார். யாரென்று தெரியாத அந்த முதியவரை இடிப்பதுபோல் வண்டியை நிருத்திய ராகுல் தணிக்கை செய்யப்படவேண்டிய வார்த்தைகளில் வசைபாடினான். " உன்னால இதுக்கும் இதுக்கும்கூட நடந்து போக முடியாதோ? இந்த வண்டி எவ்வளோனு தெரியுமா? ரொக்கமா 50,000 ரூபா.. உன் வயசுக்கு சொகுசா வண்டீல போயி இரங்கனுமோ?"  என்று அந்த முதியவரின் சுருக்கமடைந்த முகம் மேலும் சுருங்கும் அளவிற்கு திட்டி தீர்த்தான். அக்கம் பக்கத்தில் நடந்து சென்றவர்கள் மட்டுமல்லாது அருகில் இருந்த வீடுகளிலிருந்தவர்களும் இவன் சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தனர்.

அவரைத் திட்டிய அதே ஆத்திரத்தோடு மீண்டும் வண்டியை வேகமாக கிளப்பினான் ராகுல். 10 அடி தூரம் தான் சென்றிருப்பான், வீட்டிலிருந்தே எடுக்கப்படாமல் இருந்த வண்டியின் சைடு ஸ்டாண்ட் ரோட்டில் உரச சர சரவென்ற சத்தத்துடன் வண்டி ரோட்டில் சரிந்தது. ராகுலின் உடல் முழுவதும் சிராய்ப்புக் காயங்கள். சுற்றியிருந்த அனைவருக்கும் அவனை தூக்கிவிடுவதற்கோ அவன்மீது இறக்கப் படுவதற்கோ மனம் இடம் கொடுக்கவில்லை... இதற்கு முன்னர் பார்த்துக் கொண்டிருந்த வேளையை தொடர அனைவரும் சென்றிருந்தனர். ஒரு வீட்டிற்கு வெறியே நின்றுகொண்டிருந்த கிழவி " இவனுக்கு நல்லா வேணும்" என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் சென்றால். அவன் என்னை திட்டி இருந்தாலும் பரவாயில்லை, அவன் சைடு ஸ்டாண்ட் எடுக்கப் படாமல் இருந்ததை சொல்லியிருக்க வேண்டும் என்று தனக்குள்ளே முனுமுனுத்துக் கொண்டு மீண்டும் பதறாமல் நடக்கத் தொடங்கியிருந்தார் அந்த முதியவர்.

இப்படிப்பட்ட ராகுல் போன்ற பொறுமையற்ற இளைஞர்களின் புரட்சியில் நாட்டிற்கு என்ன கிடைக்கப் போகிறதென்று தெரியவில்லை.

முற்றும்.

பிறரும் நம்மவர்

நித்தம் பல சாவு சாலையிலே
அதைக் கண்டும் பலருக்கு அறிவில்லையே..
சுட்டது அவனுக்கு அறிவினிலே
உடன்பிறப்பவன் சாலையில் சாகையிலே..
                                             -தமிழ் கோ
                                   (01.12.14)

ATM ஒரு கோவில்

காசெனும் கடவுளைக் காண
கால் கடுக்க வரிசையில் நின்றிருந்தேன்;
ATM வாசலில்,
என்முறை வந்தது காடைச் சொருகி
காசை எடுத்தேன்;
சீட்டொன்று வந்தது,
இனி இங்கு வராதே,
உன் கணக்கில் காசேதும் மீதமில்லையென்று..
-தமிழ் கோ
(30.11.14)

பசியும் பணமும்

பசியிருந்தும் புசிக்க உணவில்லை;
பணமில்லாததால்,
புசிக்க உணவிருந்தும் பசியில்லை;
பணம் நிறைய இருந்ததால்..
                          - (29.11.14)

விழிகளை தானம் செய்துவிட்டுப்போ..


அன்பே..
உன் விழியென்ன முடிவிலியாய் இந்த உலகிற்கு வெளிச்சம் தரும் தீபமோ?

மண்ணில் மனிதன் மறைவு என்பது இயற்கைதான்,
உன் மறைவிற்கு பிறகு ஏற்ப்படும் இருளில் தான் இந்த உலகின் அழிவு தொடங்குமோ?!!

உன் விழிகளை தானம் செய்துவிட்டுப்போ..
பாவம் இந்த உலகம் உன் பெயரைச் சொல்லி பிளைத்துக் கொள்ளட்டும்..!
-தமிழ் கோ
(16.11.14)

ஆசை


சுவாசிக்காத நேரமும் கவிதை யோசிக்க வேண்டும்,
அதுவே என் சுவாசமாய் இருக்கும்..
ஆசை
-தமிழ் கோ
(15.11.14)

பெண்ணால் என்ன செய்ய முடியும்?


பெண்னை வெறும் உடலென பார்க்குது கலியுகம்,
சரிநிகரென எண்ணுது என் மனம்,
இவள் நெருப்பில்லாதொரு தீபமாம்,
இவள்மேல் உலகிற்கேன் கோபமாம்?
இவள் அடிமையாய் இருக்கத்தான் விதியுள்ளதா?
இவளை அடிமை செய்த ஆண்களுக்குத்தான் மதியுள்ளதா?
விதியில் எனக்கு நம்பிக்கை இல்லை,
விதி இயற்ற முடியுமெனில் அது இவளன்றி வேறு யாருமில்லை,
என்ன செய்வாளென எண்ணினோம்,
எதையும் செய்யவல்லது பெண்ணினம்.
-தமிழ் கோ
(12.11.14)

தீட்டும் புனிதமும்



இன்னும் சாதிகள் மறையவில்லையே பாரதி
மண்ணில் உடன்பிறந்த மனிதனை தீட்டு என்பதும்,
மாசுபட்ட நீரை புனிதமென்பதும் மாற இன்னும் சில நூற்றாண்டாகுமே?
-தமிழ் கோ
(09.11.14)

கருப்புப் பணம்


விசம் விற்ற பணம் கசப்பதுமில்லை..
பூ விற்ற பணம் மனப்பதுமில்லை.
ஆனால் இவை இரண்டையும் முறைகேடாக விற்ற பணம் மட்டும் கருப்பாகி விடுகிறது!
-தமிழ் கோ (28.10.14)

பெற்றோருக்காக..

பெற்றோரின் அன்பை கண்ணீரோடு ஒப்பிடுவேன்..
நம்முல் இருக்கும்போது உணரமுடியாது,
கண்களில் வழியும்போது உணர மட்டுமே முடியும்,
அது மண்ணில் விழும்போதுதான் பார்க்க முடியும்..
பெற்றோரின் அன்பை மண்ணில் வீழ்த்தி பார்த்துவிடாதீர்கள்,
அது காய்ந்து உயிரை விட்டுவிடும்.
-தமிழ் கோ