Powered by Blogger.

கூரைப் பூ

கூரையின் மேல்வைக்க
அப்பெயர் பெற்றாய்,
கூரையை ஒழித்து
மாடிக்குச் சென்று
நிம்மதியை இழந்தோம்..
ஏசிக் காற்றை மின்சாரமில்லாமல்
இலவசமாய் தந்ததந்தக் கூரை..
குடும்பத்தைக் காத்த கூரை வீட்டை பெண் என மதித்துத்தான் தலையில் பூ வைத்தார்களோ..!
பெண் தலையில் பெண்னா?!
ஆம்.., திருமணம் முடிக்கும் ஒரே பூ நீதானே கூரை பூவே!
பெண்னாக உன்னைக் கருதி மங்கலத்திற்கு மஞ்சள் நிற ஆவாரம்பூ இணைத்து மூச்சு பெற்று வாழ்ந்திட அறிவியல் கூற்றாய் மாவிலையும் சேர்த்து வைத்து ஒன்றாய் கட்டி மணமுடித்தோம்..
கொடுத்து வைத்தவள் நீ.. கணவனே இல்லாமல் உனக்கு வருடா வருடம் திருமணம்..
யாரும் உன்னை வேண்டி வளர்ப்பதில்லை,
இருந்தபோதும் யாவரும் தேடும் நாளில் இலவசமாய் பூத்திருப்பாய்.
பாவம் நகரத்தார்.. காட்டை அழித்ததன் பலனாக அவர்கள் உன்னை விலைகொடுத்து வாங்குகிறார்கள்..
தமிழருக்கென்று தனி பூ இருந்தாலும் தமிழர் திருநாளென்று வந்தால் தேடுவது உன்னைத்தான்..
எத்துனை பெரிய மாளிகை கட்டினாலும் அதை கூரையாக்கி பூச்சூடச் செய்தவள் நீ..
மக்கள் மகிழ்ச்சிக்காக வருடா வருடம் உயிர் கொடுக்கும் உன்னை நினைத்தேனும் காடுகளை விட்டுவைப்பார்களா என்று தெரியவில்லை..
-தமிழ் கோ (14.01.15)